10/09/2026
#முடவாட்டுக்கால்கிழங்கு
#வாதவள்ளி என்றும் #கற்பகராஜன் என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு #முடக்குவாதம் #மூட்டுவலி #தசைப்பிடிப்பு ஆகிய அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது.
சித்தர்களால் மூலிகை மலை எனக் கொண்டாடப்படுகின்ற #கொல்லிமலையின் மிகச் சிறப்பான அடையாளமானது இக் கிழங்கு. அரப்பளீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் அனைவரும் மூலிகை சூப் அல்லது மூட்டுவலி சூப் என்ற பெயரில் இந்த சூப்பை நிச்சயமாக அருந்தி இருப்பர்.
#பெயர்க்காரணம் பார்ப்பதற்கு மயிர்கள் அடர்ந்த ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருப்பதாலும் , #முடவன்_ஆட்டும் _கால்,
#முடக்கு_நீக்கும்_கிழங்கு என்ற பெயர்களே மருவி இவ்வாறு முடவாட்டுக்கால் கிழங்கு என அழைக்கப்படுகிறது.
இக் கிழங்குகள் மண்ணில் வளர்வதில்லை. இவற்றிற்கு வேர்களும் கிடையாது. இவை கடல் மட்டத்திலிருந்து 3800 அடி உயரத்திற்கு மேல் உள்ள #மலைகளின்_பாறைகளில்_ஒட்டி வளரும் ஒருவகை பெரணித் தாவரமாகும்.
இவை அந்தப் பாறைகளிலுள்ள செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், குறிப்பாக சிலிகா மற்றும்
பிற தாது உப்புக்களையும் தனது தோலில் அமைந்துள்ள தூவி போன்ற அமைப்புகளால் உறிஞ்சி வளர்கிறது.
இதிலுள்ள சிலிகா அயனி, கற்பமருந்து என்பதை நாம் அறிவோம். அதனால்தான் காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இதனை #காயகற்ப_மூலிகை எனக் குறிப்பிடுகிறார்கள்.
இதை ாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் வாத,பித்த,கப சம்மந்தமான 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்றும் குறிப்பிடுகிறார்கள் . இவ்வளவு அற்புத ஆற்றலுடைய இக்கிழங்கு #முழங்கால் #மூட்டுவலி #எலும்புவலி #தசைவலி #நரம்புவலி #உடல்வலி ஆகிய வலிகளை போக்கும் வல்லமை உள்ளது. அது மட்டுமல்லாது மேலும் பல எண்ணற்றப் பயன்களை தன்னகத்தே கொண்டது.
அவை
1. தாய்ப்பாலுக்கு நிகரான லாரிக் அமிலம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2. மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்கும்.
3. அனைவருக்கும் பொதுவான #கால்சியம் குறைபாட்டுக்கு மிகச்சிறந்த நிவாரணி. #பெண்களுக்கு #பருவமடைகையிலும் #கர்ப்பகாலத்திலும் #குழந்தைப்பேறு முடிந்ததும் #மெனோபாஸ் சமயத்திலும், உடலில் உருவாகும் கால்சியம் சத்துப் பற்றாக்குறையை பூர்த்தி செய்து உடலுக்கு வலிமையைத் தருகிறது.
4. இவற்றில் உள்ள தாது உப்புகளான சிலிகா, தங்கம், மெக்னீசியம், இரும்பு, கால்சியம் ஆகிய சத்துக்கள் இயல்பாகவே விந்துவை அடர்த்தியாக மாற்றும். இதனால் இனிய தாம்பத்தியமும் சிறந்த குழந்தைப்பேறும் அமையப் பெறும்.
5. கர்ப்ப காலத்தில் இதனை எடுத்து வந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
5. இக் கிழங்குகளால் மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் மூலமாக உடல் புத்துணர்ச்சி அடையும். #சூப்_வைக்கும்_எளிய_முறை*
( நான்கு கப்ஸ் சூப்)
மேல் தோல் நீக்கி சுத்தப்படுத்திய கிழங்கு 100 கிராம்
மிளகு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
தனியா ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் 6
பூண்டு 6 பல்
இஞ்சி சிறு துண்டு இவற்றை ஒன்றிரண்டாக கல் உரலில் சிதைத்துக் கொள்ளவும். அல்லது மிக்ஸியிலிட்டு அரைத்துக் கொள்ளவும்.
உடன் தேவைக்கேற்ப உப்பு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு
20 நிமிடங்கள் சிறு தீயில் இருக்கட்டும். ஓரளவிற்கு தண்ணீர் சுண்டி சூப் பதத்திற்கு வந்திருக்கும். கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
வடிகட்டி கொத்தமல்லி இலைகளைத் தூவி பறிமாறவும். ( விரும்பினால் அரை ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது வெண்ணை சேர்த்தும் குடிக்கலாம்.)
இந்த சூப்பை 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவந்தால் கடுமையான #முழங்கால்_வலி, #குதிகால்_வலி, முழங்கால்_சவ்வு_பலவீனம், #தசைப்_பிறழ்ச்சி ஆகியன நீங்குவதைக் காணலாம். மேலும் குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்புகள் நீங்கும்.
#துவையல் சுத்தப்படுத்திய கிழங்கு, சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், தக்காளி, அனைத்தையும் லேசாக நல்லெண்ணெய் , விளக்கெண்ணெய் அல்லது வெண்ணை மட்டுமே உபயோகித்து வதக்கி, உடன் உப்பு சேர்த்து அரைத்துத் துவையலாகவும் சாப்பிடலாம். கடலை எண்ணெய் மற்ற பிற பாக்கெட் எண்ணெய்களைச் சேர்க்க வேண்டாம்.
*குறிப்பு*
மூட்டில் நீர் கோர்த்து அதனால் வலியும் வீக்கமும் உள்ளவர்கள்,
கிழங்கின் மேல் தோலை சுத்தப்படுத்திய பிறகு அதைத் தூக்கி எறிந்து விடாமல் அந்தத் தோலுடன் ஒரு கைப்பிடி முடக்கற்றான் இலை அல்லது ஒரு ஸ்பூன் முடக்கற்றான் பவுடர் சேர்த்து அரைத்து முட்டியைச் சுற்றிப் பற்று போல போட்டு நன்கு உலர்ந்ததும் கழுவி வர வலியும் வீக்கமும் குறைவதைக் காணலாம்.
இந்தக் கலவையை மூட்டை கட்டி நல்லெண்ணெய் நனைத்து வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால் வலி விரைவில் குறையும்.
ஒரு கிலோ கிழங்கு விலை 200₹ தமிழ்நாட்டுக்குள் ப்ரொபஷனல் கொரியர் மூலம் அனுப்ப 40₹ எனவே 240₹ . பெங்களூருக்கு 60₹ எனவே 260₹.
மற்ற இடங்களுக்கு கிலோவிற்கு 75₹ இண்டியன் போஸ்ட் மூலமாக.
~~~~~~~~~~~~~~~~~
Gpay number
9443234944 Alli Or
9600800221 Aaranyapasumaikudil
~~~~~~~~~~~~~~~
பணம் அனுப்பிய பிறகு அதன் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் உங்களது பெயர் முகவரி போன் நம்பர் டைப் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பவும். நீங்கள் அனுப்பிய அன்று கொரியர் செய்யப்படும்.
*அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்*
1. கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். சாதாரணமாக ஒரு ஈரத் துணியில் சுற்றி வைக்கலாம். அதிக அளவு வாங்கி இருந்தால் மணலில் புதைத்து வைப்பது சிறப்பு. எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
2. ஒருவருக்கான அளவு என்பது கிழங்கை ஒன்றிரண்டாக அரைத்த பின் ஒரு குழம்புக் கரண்டி அளவு.
3. ஒரு நாளின் எந்த நேரத்திலும் அருந்தலாம்.
4. தொடர்ந்து 48 நாட்கள் அருந்தினால் மிகவும் நல்லது. தொடங்கியப் பிறகு நடுவில் ஏதாவது காரணமாக ஓரிரு நாட்கள் விடுபட்டால் கவலை வேண்டாம், மீண்டும் தொடரலாம்.
5. பாறையில் ஒட்டி வளர்வதால் பாறையின் தன்மைக்கேற்ப நிற மாறுதல்கள் கொண்டிருக்கும். இரும்புச்சத்து அதிகம் எனில் பழுப்பு, சிவப்பு வண்ணங்களிலும், கால்சியம் சத்து மிகுந்திருந்தால் வெண்மை நிறம் சார்ந்தும் இருக்கும். கிழங்கு முழுக்கக் கருப்பாகவோ, புரையோடிப் போயிருந்தாலோ மட்டும் அந்த இடத்தை வெட்டி சுத்தம் செய்து மீதமுள்ளதைப் பயன்படுத்தலாம்
6. இந்த சூப்பை அருந்தினால் வலி முழுக்கக் குறைந்து விடுமா என்றால் நிச்சயமாக குறைந்து விடும். உங்கள் மூட்டுகளில் பெரும் தேய்மானம் அல்லது வேறு பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வலி சில நாட்களிலேயே குணமாவதைப் பார்க்கலாம்.
7. கிட்னி டயலிஸிஸ் பேஷன்ட் தவிர மற்ற அனைவரும் தாராளமாக எடுக்கலாம். ஒபிசிட்டி, சர்க்கரை டயாபட்டிக், ரத்த அழுத்தம் இருந்தாலும் இதைச் சாப்பிட நல்ல முன்னேற்றம் தெரியும்.