Control Panel Board Manufacturer

Control Panel Board Manufacturer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Control Panel Board Manufacturer, Heating, ventilating & air conditioning service, k. p. p nagar, kuniyamuthur, Coimbatore.

03/12/2023

* # #* *அசைவம் தீண்டாமையின் குறியீடா?* * # #*

*உணவில் சைவம் அசைவம் என கடை பிடிக்கும் நடைமுறை உலகில் எங்கும் இல்லை. தாவரத்தை சைவம் என்றும் இறச்சியை அசைவம் என்றும் இரண்டாக பிரித்து பார்க்கும் நடைமுறை இந்தியாவில் மட்டுமே உள்ளது.*

*உலகில் எங்கும் இல்லாத இந்த நடைமுறை இந்தியாவில் வழக்கத்திற்கு எப்படி வந்தது?*

*இனிப்பு, உரப்பு, கசப்பு காய்கரி, மாமிசம் என்று உணவில் சுவையை மட்டுமே மேலை நாடுகளில் பார்க்கிறார்களே ஒழிய உணவை சைவம், அசைவம் என்று அவர்கள் பார்ப்பதில்லை.*

*இனிப்பு ருசி கொண்ட உணவில் இறச்சி கலந்து இருந்தால் கூட அதன் சுவையை தான் பார்க்கிறார்கள். அதை அசைவ உணவாக பார்ப்பதில்லை.*

*இங்கு தான் சிறிய அளவில் உணவில் இறச்சி கலந்து விட்டால் கூட அசைவ உணவு என்று கூறி ஒதிக்கி வைத்து விடுகிறார்கள்.*

*சைவம், அசைவம் என்று உணவை பிரித்து உண்ணும் முறை மேலை நாடுகளில் மட்டுமல்ல பண்டைய இந்தியாவில் கூட கிடையாது.*

*தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால சோழன் கூட விருந்தாளிகளாக அரண்மனைக்கு வரும் புலவர்களுக்கு இறச்சியை சமைத்து கொடுப்பதை வழமையாக கொண்டிருந்தார். அப்போதிலிருந்தே பாரம்பரிய உணவாக இறச்சியை தமிழர்கள் உண்டு வந்திருக்கின்றனர்.*

*இந்து வேதந்களில் கூட மாட்டு இறச்சியை சமைத்து உண்ணும் வழமை இருந்துள்ளதை நாம் அறியலாம்.*

*ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கீழடி மக்கள் கூட வேட்டையாடு பவர்கள், யானை தந்தங்களை பயன் படுத்தியதையும் மாடுகள் வளர்த்ததையும் மாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் என்பதை ஆய்வில் அறிய முடிகிறது.*

*சைவம், அசைவம் என்ற பிரிவிணை பிற்காலத்தில் தோன்றியவை தான் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.*

*இன்றும் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு அதை சமைத்து உண்பதையே வழிபாடாக கடைபிடித்து வருகின்றனர்.எனவே சைவம் அசைவம் என்பது எல்லாம் பிற்காலத்தில் பிரிக்கப்பட்டது. தான்.*

*மன்னர்கள் காலத்திலும் வேத காலத்திலும் இல்லாத நடைமுறை எப்படி இங்கு ஏற்பட்டது?*

*உணவாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இது சில நூற்றாண்டுகளுக்கு முன் தான் சைவம் அசைவம் என்ற உணவு முறைகள் இந்திய மக்களிடம் திணிக்கப்பட்டு பட்டிருக்கிறது.*

*இந்தியாவில் தோன்றிய பழமையான மதங்களில் புத்தமும் ஒன்று, இந்தியா முழுவதும் பரவி இருந்த புத்த மதத்தின் ஜீவாதார கொள்கை உயிர்களை கொல்ல கூடாது என்பதாக இருந்தது. அக்காலத்தில் இக்கொள்கை பிரபலம் அடைய துவங்கிய பொழுது தான் சைவம் அசைவம் என உணவு முறை பிரிக்கப்பட்டிருக்கிறது.*

*புத்தம் தோன்றிய காலத்தில் தீண்டாமை தலை விரித்தாடியது. எனவே தான் அதற்கு எதிராக புத்தர் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் என்றார்.*

*இறச்சி உண்பது தீண்டாமையின் அடையாளமாக அப்போதைய மக்களால் பார்க்கப்பட வில்லை. அப்படி பார்க்கப் பட்டிருந்திருந்தால் உயிர்களை கொல்ல கூடாது என்ற புத்தரின் நிலைபாடு தீண்டாமையை ஆதரிப்பதாகவே பார்க்கப்பட்டிருக்கும்.*

*எனவே தான் உயிர் வதைக்கு மாற்றாக தவர உணவுகளை உண்ண வேண்டும் என்ற அவரின் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டு வந்தது.*

*ஆனால் பிற்காலத்தில் புத்தம் அழிந்த பின் இந்த கருத்தே ஒரு குறிப்பிட்டவர்களின் நம்பிக்கையாக நம்பப்பட்டு விட்டது.*

*சைவம் அசைவம் என்பது கூட ஒரு வகையில் வர்ணாசிராமத்தை தூக்கி பிடிக்கும் நடவடிக்கை தான்.*

*நமக்கு பிடிக்காத எத்தனையோ உணவு வகைகள் உண்டு அதை நாம் சாப்பிடுவதில்லை. அது போல இறச்சி பிடிக்காது என்று ஒதிக்கி வைத்தால் அது வேறு விசயம்.*

*ஆனால் சிலர் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் இறச்சியை உண்ண மாட்டோம் என்கின்றனர். தன்னை உயர் வகுப்பாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கையில் ஒன்றாக இதை கருதுகின்றனர்.*

*அசைவ உணவு சமைத்த பாத்திரத்தில் கூட சைவ உணவு பரிமாற கூடாது என்கிற மனநிலை இவர்களிடம் இருக்கிறது என்றால் இது தீண்டாமையின் ஒரு வடிவம் தான்.*

*இறச்சியை உணவின் வடிவமாக பார்ப்பதில்லை தீட்டின் வடிவமாக பார்க்கின்றனர். அதை தொட்டாலே குளிப்பது, அதை சமைக்கும் போது வரும் வாடையை துருவாடைக்கு ஒப்பாக நினைப்பது. மாமிசம் சாப்பிடுபவர்களை கண்டால் கீழ்தனமாக பார்க்கும் மனநிலையும் ஒருவகையான தீண்டாமை தான்.*

*சைவ உணவு உண்பவர்கள் தங்களை தூய்மை யானவர்களை போல கருதி கொள்வது இன்று சாதாரணமாகி விட்டது.*

*முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்பதற்கு சொல்லப்படும் காரணங்களில் ஒன்று அவர்கள் மாமிசம் சமைப்பார்கள் என்பதே பல இடங்களில் அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை.*

*மாமிசம் சமைப்பார்கள் என்பதனால் இன்றும் கூட முஸ்லிம்களுக்கு திருமண மண்டபங்கள் கொடுப்பதில்லை. அதையும் மீறி கொடுத்தால் அங்கிருக்கும் பாத்திரங்களை பயன் படுத்த அனுமதி இல்லை.*

*தெருவில் நடக்காதே, குலத்தில் குளிக்காதே என்பதைபோல அசைவ உணவு இன்றுதீண்டாமையின் ஒரு வகையான குறியீடாக பார்க்கப்படுகிறதா?என்பதை மறுக்க முடியாது.*

*ஆக்கம்: பா.அப்துல் ரஹ்மான்*

*நன்றி: நடுநிலைச் சமுதாயம்.*

05/12/2015

Good

02/01/2014

Heating, ventilating and air conditioning service

04/03/2013

Address

K. P. P Nagar, Kuniyamuthur
Coimbatore
641008

Alerts

Be the first to know and let us send you an email when Control Panel Board Manufacturer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Control Panel Board Manufacturer:

Share