OM Saravana Construction

OM Saravana Construction 🏘BUILDING THE FUTURE🧱

🏡We love what we do, and it shows in our work 💼Contact us to discuss your next project📈

04/03/2025
Lift Construction to be provide on Site🏘🧱
31/01/2025

Lift Construction to be provide on Site🏘🧱

மனையடி சாஸ்திரம்
06/01/2025

மனையடி சாஸ்திரம்

மனையடி தகவலும், கோள்களும், பரிவார தெய்வங்களும்...

கடந்த சில தினம் முன்பு ஒரு நண்பர் என்னிடம் நம்முடைய தொழில் அல்லது வருமான மேன்மைக்கு நாம் வசிக்கும் இடமும் சூழ்நிலையும் சாதகமாகவும் பாதகமாகவும் செயல்படுமா? என்று கேட்டார்....
வாஸ்து சாஸ்திர நூல் இதைப்பற்றிய பலவிதமான செய்திகளையும் தகவல்களையும் தெரிவிக்கிறது. இவைகள் உண்மையில் செயல்படுமா? என்ற அவரது கேள்விகளுக்கு பதிலாக மனையில் உண்டாகும் பலன்கள், தோஷங்கள், மனையில் அமரும் தெய்வங்கள் மற்றும் கோள்களின் தொடர்புகள் பற்றிய ரகசியங்களை காகபுஜண்டர் பெருமானின் அருளாசியுடனும் எனக்கு கிடைத்த அனுபவம் அனுபவத்தால் உண்டான தேடல்களும் விடைகளும் பலன்களையும் பற்றி இன்று விரிவாக பகிர்கிறேன்.....

இவ்வுலகில் மனிதன் வாழ உணவு, உடை, உறைவிடம் அவசியமான தேவைகள் என்று நாம் அறிவோம். உணவிற்கு ஒரு எல்லையுண்டு ஆனால் உடைக்கும் உறைவிடத்திற்கும் மனமே எல்லையை நிறைவு செய்யும்.

நாம் பாலகனாக இருந்தபொழுது எங்கள் தெருவில் ஒரு நபர் பழைய வீட்டை விலைக்கு வாங்கி இடித்து விட்டு மீண்டும் வீடு கட்ட முயற்சி செய்த பொழுது அவரால் கட்டமுடியாதபடி சில பிரச்சனைகள் சூழ்ந்து மனையை விற்றுவிட்டார். என்னுடன் படித்த ஒரு நண்பன் அடிக்கடி வீட்டை மாற்றிக்கொன்டே இருப்பார் காரணம் கேட்டபொழுது வீட்டில் பிரச்சனைகள் வருகிறது என்பார். மற்ற ஒரு நண்பர் வீட்டில் சில மாற்றங்களை செய்து கொண்டே இருப்பர். அறைகளை துளைத்து வாசல் வைப்பதும் சில கதுவுகளை முடிவைப்பதுமாக இருப்பார். இது போல நான் கவனித்த பல நபர்கள் தாங்கள் கட்டிய வீட்டில் பிரச்சனைகள் துவங்குகிறது என்று மனையில் புதிதாக சில மாற்றங்களையும் செய்தும் பலன் ஏற்படவில்லை என்று பல சோதிடர்களை வாஸ்து நிபுணர்களையும் கண்டு பரிகாரங்கள் செய்தும் வருகின்றனர்.

சோதிட நூல்களை படிக்கும் பொழுது கோள்களினால் மனிதனின் செயல்பாடுகளில் சில மாற்றங்களும் தடைகளும் உயர்வுகளும் நன்மைகளும் தீமைகளும் நடக்கிறது என்று புரிந்தது. ஆனால் ஒரு மனையால் பிரச்சனைகள் வருமா? என்ற கேள்வி எழுந்த பொழுது நம் முன்னோர்கள் கொடுத்த மனையடி சாஸ்திரம் என்ற நூல் நம் வசிக்கும் பூமியை பற்றிய பல அறிய தகவல்களை, மற்றும் பஞ்சபூத கலவையில் உண்டான நம் உடல் இந்த பூமியோடு ஒன்றி வாழும் பொழுது முரண்பாடுகள் ஏற்பட்டால் அதில் உண்டாகும் விளைவுகளை சமம் செய்ய நாம் என்ன செய்யவேண்டும் என்றும், முரண்பாடுகள் வராமல் இருக்க நாம் எவ்வகையான மனை அமைப்புகளை தேர்வு செய்யவேண்டும் என்றும் விளக்கம் அளித்து இருப்பதை படித்த பொழுதும் மனம் நிறைவு அடையவில்லை. காரணம்
உறவினர் ஒருவர் மனையடி நூலில் சொல்லியது போல கவனித்து வீட்டை மனையில் கட்டி இருந்தார் ஆனால் குடி வந்த நாள் முதல் அவரின் மனைவிக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டது. நூல்களில் சொல்லியதை பிழையில்லாமல் கட்டி இருப்பதை நாம் கவனித்த பொழுது எந்த குறைபாடு பெண்களை வதைக்கிறது என்ற குழப்பம் ஏற்பட கோள்களையும் வீட்டையும் மனையும் ஒப்பிட்டு பார்த்த பொழுது சுக்ரனின் சாபம் வீட்டில் வெளிப்பட்டது புரிந்தது.

கோள்கள் மனைகளில் செயல்படும் பொழுது அவைகளின் தாக்கத்தை பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. இப்படி மனையில் பஞ்சபூத முரண்பாடு ஒருவகை துன்பத்தை தரும் என்றும், கோள்கள் ஒருவகையான துன்பத்தை தரும் என்றும் உறுதிப்படுத்தி ஒரு மனையை தேர்வு செய்ய நண்பருடன் சென்று மனையில் நின்று சுற்று புறத்தை கவனித்து சில கணிதங்களை
கணித்துவிட்டு வாகனத்தில அமர கிளம்பியபொழுது என்னுடைய கால்களை ஒரு சில கற்கள் தடுத்து ரத்தம் வரச்செய்தது. எனக்கு மனையை பற்றிய மாற்று சிந்தனையை தூண்டியது. கேள்விகளுடன் காகபுஜண்டரின் சுவடி தகவல்களை தேடி சென்று கேட்டபொழுது கிடைத்த தகவல்கள் மண்ணை பற்றியதோ கோள்களை பற்றியதோ இல்லாமல் பரிவார சக்திகளை பற்றியதானதால் சுவாரஸ்யம் ஏற்பட்டது. மனைகளில் பரிவார சக்திகளின் பிரவேசத்தை பற்றி காகபுஜண்டர் கூறியதை அறிந்து கொள்ளும் முன் வாஸ்து சாஸ்திரம் என்பது எதை சொல்கிறது என்ற தகவலை முதலில் அறிந்து கொள்வோம்.

வாஸ்து சாஸ்திரம் என்ற நூலை பற்றி மத்ஸ்ய புராணம் விபரிக்கிண்றது. வாஸ்து என்பது ஒரு ஆணின் சக்தி என்றும் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற சிவபெருமானின் வேர்வை துளிகளில் தோன்றிய பூதம் என்றும் தன்னுடைய பசிக்கு பூமியில் கிடந்த அனைத்தையும் உண்டது என்றும், தீராத பசியால் உணவுக்காக சிவனை தியானித்து தவம் செய்து சிவதரிசனம் கிடைத்த பொழுது
இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து அழிக்கும் சக்தி எனக்கு தர வேண்டும் என்று கேட்டு பெற்றது என்றும், இதை கவனித்த பிரம்மாவும் தேவர்களும் அந்த பூதத்தை குப்புற தள்ளி அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் அமர்ந்து அதனிடம் பூமியில் ஹோமத்திற்கு தரப்படும் பொருட்கள் மற்றும் மனைகளை பூசிக்கும் பொருட்கள் போன்றதை உண்டு உன்பசியை தீர்த்து கொள் என்றும் வாஸ்து புருஷன் என்று அதற்க்கு பெயரிட்டு அழைத்தனர் என்று மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

இங்கே ஒரு விவரத்தை நாம் கவனிக்க வேண்டும். பூமி என்பது பெண் தன்மை உடையது அன்னையின் அம்சம் என்று நம் சைவ நூல்கள் சொல்கிறது. புராணப்படி சிவனின் வேர்வை துளிகளில் உண்டான வாஸ்து புருஷர் குப்புற கிடத்தப்பட்டு உள்ளார் என்று தகவல் கவனிக்கும் பொழுது ஆண் பூதம் என்ற வாஸ்து புருஷர் பஞ்சபூத கலவையான பெண்ணுடன் சேர்ந்து உள்ள அமைப்பே நாம் வாழும் பூமி எனலாம்.

மனையடி கலைகளை பொறுத்த வரையில் நூலை படித்து விட்டு ஒரு மனையை பற்றிய ஆய்வில் இறங்கி நாம் செயல்பட்டால் அதனுடைய விளைவுகள் நம் காலத்தையும் செல்வத்தையும் விரயம் செய்வதுடன் மனஉளைச்சலையும் தந்து விடும் என்பது என் அனுபவம்.

கலைகளை பொறுத்தவரையில் காகபுஜண்டரின் துணையோடு அல்லது சித்தர்களின் ஆசிகளோடு துவங்குவதே சிறப்பான பலனை தரும் என்று கலைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நாங்கள் வீடு கட்ட துவங்கியபொழுது எங்களுடைய பொறியாளர் ஒரு வாஸ்து தகவல் நூல்களை படித்துவிட்டு அறைகளை பிரிக்கும் பொழுது அடிகளை கணக்கிட்டு வாஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டு அறைகளின் நீள அகல அடிகளை அமைக்கவேண்டும் என்றும், மனைக்குள் குறிப்பிட்ட அளவு அடிகள் கட்டிடங்கள் அமைப்பது தான் விதி என்றும் வற்புறுத்தினார். அவரிடம் நாம் அடிகள் என்று எதை குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று கேட்டபொழுது அவர் வாஸ்து நூலில் சொல்லப்பட்ட அடிக்கணக்கை தெரிவித்து இதன் படி என்றார். தமிழர்கள் பயன்படுத்தி வந்த கொடுந்தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக மருவி எளிமையான தமிழாக மருவி பழைய நூல்களில் பதியப்பட்டு இருந்த தமிழ் சொற்கள் புதியதாக புதிய ஆசான்களினால் பதியப்படும் பொழுது மருவி பதியப்பட்டது எனலாம் இவ்வாறாக மருவி பதியப்பட்டது நாளடைவில் அவைகளின் அர்த்தம்கள் மாற்றி புரிந்து கொள்ளப்பட்டது.

தற்போது எல்லோரும் வாஸ்துவின் சட்டத்திற்கு உட்பட்டு வீடு கட்டவேண்டும் எல்லோரும் விரும்புவதை நாம் பழக்கத்தில் காண்கிறோம். சிலர் வாஸ்து புத்தகங்களை கடைகளில் வாங்கி படித்து அதில் சொல்லி உள்ளது போல தன்னுடைய வீட்டை அமைக்கவேண்டும் என்று ஆவல் கொள்கிறாரக்ள். மனையடியின் அடிப்படை விதிகளை புரிந்தும் அனுபவத்தில் உழன்ற நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மனையில் வீடு அமைப்பது சில பிரச்சனைகளை மட்டும் தவிர்த்து தரும் என்றும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். மனையின் அடிப்படை விவரங்களை சொல்லும் ஒரு நூலை நான் கடந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். அதில் மனையின் தன்மையை அறியும் விதமும் மனை முகூர்த்தம் செய்யவேண்டிய விதமும் மனையில் கட்டிடம் எழுப்பவேண்டிய விதமும் நிறைவாக கிரகப்பிரவேசம் செய்யவேண்டிய நாள் நட்சத்திரம் திதி திங்கள் மற்றும் முகூர்த்தம் பற்றிய தகவல் இருந்தது. ஆனால் மனையில் பிணங்கள் புதைக்கப்பட்டு இருந்து அதை மறைத்து மனைகளாக பிரித்து இருந்தால் அதை எவ்வாறு கண்டு கொள்வது என்றும், பாம்பு புற்று இருந்து அது அழித்து மனைகளாக பிரித்து இருந்தால் எவ்வாறு கண்டு கொள்வது என்பதை போல விசித்திர தகவல் எதுவும் இல்லை.

கடந்த வருடம் ஒரு நண்பர் தான் ஒரு மனையை வாங்கி வாஸ்து சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து விதத்திலும் கட்டிடம் எழுப்பியதாகவும், ஆனால் தனக்கு கடன் பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது என்றார். அவருடைய சாதகத்தை பெற்று அதில் ஆய்வு செய்தால் அவர் கடக லக்கினம் மகம் நட்சத்திரம் சுக்ரன் ராகுவுடன் சேர்ந்து துலாத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு தங்களுக்கு தண்ணீர் மீது ஆவல் உண்டா என்றதும் வெகு நேரம் குளிப்பேன் என்றார். கடகம் சிம்மம் லக்கினத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் கரையோரம் அல்லது தெருவின் முஞ்சந்தி அல்லது தெருவின் இறுதி பகுதி அல்லது வாய்க்காலின் அருகில் அல்லது நீர் தேக்க தொட்டி வீட்டின் அருகில் அமைய பெற்று இருப்பார்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. மேலும் குபேர அம்சமான நீர் நம் வீட்டில் அடைப்பு இல்லாமல் வெளியேறினால் கடன்கள் உருவாகும் என்று மனையடி நூல்கள் சொல்கிறது என்றதும் அவர் தான் வாய்க்காலின் அருகே இருப்பதாகவும் தன் வீட்டில் எந்த வகையிலும் நீர் விரையம் ஆவது இல்லை என்றும் வடக்கு வாசலான அவரின் மனை என்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். இவரின் பதில்கள் எனக்கு சில குழப்பத்தை தர நாம் ஆசானிடம் கேட்டு அறிந்து கொள்ள அவரை அழைத்து சென்று சிவ நாடி பார்த்த பொழுது அவரின் மனை கிணற்றை முடி மறைத்து அமைக்கபட்ட மனை என்றும் ஒரு தோப்பின் அக்னி முலையில் இருந்த அந்த கிணறு பரிகாரம் செய்யாமல் மூடப்பட்டு உள்ளது என்றும் தகவல் வந்தது.

கிணற்றை முடி மனைகளாக பிரித்து தரப்பட்ட அந்த மனையில் அவர் வசிப்பது கிணற்றின் மேல் அவர் குடும்பம் வசிப்பது என்றே சொல்லவேண்டும். எல்லோருக்கும் இது போல விசித்திரமான மனைகள் அமைவது இல்லை இது போல அமைப்பை கவனிக்க நாம் சுக்ரன் தன்மையை வைத்து வீட்டையும் செவ்வாய் தன்மையை வைத்து மனையையும் சனி தன்மையை வைத்து மனையின் அடியில் உள்ள நீர் தன்மையும் கவனித்து பலன் அறிந்தும் மனையின் அருகில் உள்ள எல்லை தெய்வத்தை கவனித்தும் நாம் தேர்வு செய்வது நல்ல பலனை தரும் என்று அனுபவத்தில் புரிந்து கொள்ளமுடிந்தது.

ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை வைத்து இதில் வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது. இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க முடியாது என்றாலும் சில விபரங்களை நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
(1) மனையின் எதிரில் ஒற்றை பனைமரம், கிணறு, ஆலமரம், எருக்கன் செடி, இல்லாமல் இருக்க வேண்டும்.
(2) கோவில் கோபுரத்தின் நிழல் அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது.
(3) மனையில் பாம்பு புற்று, ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது.
(4) பெருமாள் கோவிலின் பின்புறம், சிவன் /கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது.
(5) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.
(6) மனை இடத்தின் அமைப்பு தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது.
(7) கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும்.
(8) புற்று உள்ள இடம் ராகுவின் தோஷத்தை கொண்டது இதில் மனைகளை எழுப்பக்கூடாது என்றும், கத்தாழை செடிகள் உள்ள மனை சனியின் ஆசிகளை கொண்டதால் இங்கே கட்டிடங்கள் எழுப்பலாம் என்றும் நூல்கள் சொல்கிறது.

சோதிட நூல்களில் மனைகளுக்கு முகூர்த்தம் செய்ய சில தகவல்களை சொல்லப்பட்டு உள்ளது....
(1) பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை முகூர்த்தம் செய்ய கூடாது.
(2) சூரியனின் காலற்ற நட்சத்திரத்தில், செவ்வாயின் தலையற்ற நட்சத்திரத்தில், குருவின் உடலற்ற நட்சத்திரத்தில் மனை முகூர்த்தம் செய்தால் வீடு கைமாறி அல்லது நின்று போகும் என்றும்,
(3) அஸ்வினி ரோகினி ஹஸ்தம் அனுஷம் திருவோணம் உத்திரட்டாதி பூசம் ரேவதி சதயம் நட்சத்திரத்தில் முகூர்த்தம் செய்ய உத்தமம் என்று நூல்கள் சொல்கிறது.
(4) அஸ்வினி புனர்பூசம் பூசம் ஹஸ்தம் ஸ்வாதி திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் மனைகளுக்கு கடன் பெற்று வீடுகளை கட்டினால் வீடு கைமாறும் என்றும்,
(5) தனுசு லக்கின காலத்தில் ஆழ்குழாய் அல்லது கிணறு போன்ற செயல்களை மனைகளில் செய்யக்கூடாது என்றும் நூல்கள் சொல்கிறது.
இவ்வாறாக சோதிட தகவல்களை மனையடி தகவல்களை கற்றுணர்ந்து தொழிலில் பண்டிதர்கள் ஈடுபட்டாலும் சில முரண்பாடுகள் ஏற்பட்டு விடுவதை நாம் காண்கிறோம்.

ஒரு பொறியாளர் சில வரைபடத்துடன் என்னை சந்திக்க வந்தார். தான் ஒரு கட்டிடம் எழுப்ப போவதாகவும் இதில் உள்ள படி செய்தால் சரியாக இருக்குமா? என்று உங்கள் நண்பர் உங்களுடன் ஆலோசித்த பின் முடிவு செய்ய சொன்னார் என்று சொல்லி மனை வரைபடத்தை தந்தார்..அவர் கொடுத்த வரைபடத்தை கவனித்த பொழுது மனையடி நூலின் சட்டத்திற்கு உட்பட்டு வரைந்து இருந்தார்.

நான் அவரிடம் இந்த மனை வடக்கும் மேற்கும் முகப்பில் உள்ளது என்பதால் வாசல் மேற்கில் வைத்து உள்ளீர்கள் ஆனால் சமையல் செய்யும் அக்னி முலை அடுத்த வீட்டின் சுவர் உள்ளது இங்கே சமையல் கூடாது மேலும் வாயு மூலை மட்டுமே நம்முடைய முன்னோர்களை நம் மனைக்குள் அழைத்து வரும் சக்தி கொண்டது இங்கே அவசியம் காற்று வரும் நுழைவாயில் வேண்டும் என்றேன்.

மேலும் நண்பர் மிதுன லக்கினம் சதய நட்சத்திரம் கும்பராசி என்பதால் நாகத்தின் அடையாளமான நிலக்கதவு தனித்து இருக்கவேண்டும் ஜன்னல் கூடாது என்றும் சனியின் ராசிகளை கொண்ட நபர் என்பதால் குபேர எல்லையான வடக்கில் மட்டும் குளியல் நீர் வெளியேறும் அமைப்பும் நீர்நிலைகள் மனையை விட்டு வெளியேறும் அமைப்பு தடுத்து நின்று செல்லும் படியாக அமைக்கவேண்டும் என்றேன்.

மனையடி நூலில் சனியின் சகோதரனாக கருதப்படும் குபேரனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு மனையில் இவரின் தன்மை எப்படி அமையபட்டு உள்ளதோ அது சார்ந்தே பொருட்செல்வம்க்கள் சேரும் என்றும் இவரின் துவக்கம் சனி தேவரின் ஆழ்துளை நீர் அல்லது கிணறு அமைப்பதில் இருந்து துவங்கும் என்று நூல்களில் சொல்லி உள்ளார்கள்.

சில வீடுகளில் கொல்லையில் கிணறுகளை மூடி பயன்படுத்தாமல் வைத்து இருப்பதையும் சிலர் அதை மூடிவிடுவதையும் நாம் பார்த்தது உண்டு அதை பற்றி அவர்களிடம் கேட்கும் பொழுது நீர் சுரப்பது இல்லை அதனால் மூடி விட்டோம் என்பர் சிலர் மின் பொருள் எந்திரம் வந்த பிறகு அதை நாங்கள் பயன்படுத்தி கிணற்றை மூடி விட்டோம் என்பார்கள். கிணற்றை பற்றிய விவரங்களை நாம் கவனிக்கும் பொழுது மிகவும் விசித்திர தகவல்கள் நமக்கு கிடைத்தது உண்டு....

மனையடி சாஸ்திர நூல் என்று வாஸ்து கலையானது மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளவும், பின்பற்றவும் முடியும் என்பதால் பலர் மனையடி நூல்களை படித்து அதில் சொல்லி உள்ளது போல வீட்டில் பொருட்களை அமைக்கின்றனர் என்பதனை நாம் காணமுடிகிறது. உண்மையில் மனையடி நூலில் சுவர் கடிகாரம் வைப்பது முகம் பார்க்கும் கண்ணாடி வைப்பது நீர்க்குமிழி வைப்பது மீன்தொட்டி வைப்பது பணமும் துணியும் வைக்கும் பெட்டகம் வைப்பது பற்றிய தகவல்கள் இல்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.

சிலர் நடராஜர் புல்லாங்குழல் வைத்து உள்ள கிருஷ்ணர் நாக்கை தொங்கவிட்ட காளி கோமணத்துடன் உள்ள ஆண்டி முருகன் கண்களை முடி அமர்ந்த சிவன் அமர்ந்த லட்சுமி பாம்பை வீணையாக கொண்ட சரஸ்வதி போன்ற உருவமோ அல்லது புகைப்படமோ வீட்டில் வைத்து இருந்தால் குலத்திற்கு ஆகாது என்று சொல்வதையும் நாம் காண்கிறோம்.

மனையடி நூலையும் தாந்திரிக தகவல்களையும் ஒன்றாக சேர்த்து வாஸ்து என்று பெயரில் இந்த முகநூலில் பலர் பதிவதை நாம் காண்கிறோம்.

சித்தர்கள் விவரித்த மனையடி நூலில் கோள்கள் பூமியில் மனிதனுடன் எப்படி செயல்படுகிறது என்றும், மனைகளில் கோள்களினால் உண்டாகும் நண்மைகளையும் தீமைகளையும் எட்டு திக்குகளில் உள்ள பாலகர்கள் இவர்களுடன் சேர்ந்து உண்டாக்கும் செயல்களை விவரித்து சொல்வதுடன் தோஷம் நீங்க பரிகாரத்துடன் பதித்து உள்ளார்கள் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

தெலுங்கர்களும் சௌராஷ்டிர இனத்தவரும் விரும்பி பின்பற்றும் தாந்திரிக முறைகளை மனையடியில் சேர்த்து சொல்வது தவறான கணிதமாகும் என்று நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பூமியில் ஒரு இடத்தை நூல்பிடித்து ஒரு குறிப்பிட்ட அளவு கணக்கிட்டு அதன் அளவிற்கு எல்லையை சுற்றி நூலினால் கட்டிவிட்டால் அது மனையாகி விடும்.
அந்த கட்டுக்குள் கட்டிடத்தை கட்டினால் வீடாகி வீடும். அந்த வீட்டில் உயிர்கள் தங்கி வாழும் பொழுது அது உயிர்களின் இல்லமாகி விடும்.

இல்லத்தில் அந்த குலத்தின் முன்னோர்களும் தெய்வங்களும், தேவதைகளும் குடியேறும் பொழுது அந்த மனை வீடு இல்லம் என்ற நிலை குடும்பமாக மாறி போற்றப்படும். நிலம் மனைகளாக இருக்கும் பொழுது செவ்வாயின் அம்சத்தை பெற்றும், மனையில் கட்டிடம் எழுந்ததும் சுக்ரனின் அம்சத்தை பெற்றும், சுற்றுப்புற அடைப்பு ஏற்பட்டவுடன் ராகு கேது அம்சம் பெற்றும், மனையில் உள்ள நீர் சனியின் அம்சமாகவும், மனையில் உள்ள நெருப்பு(மின்சாரம்) சூரியனின் அம்சமாகவும், மனையில் உண்டாகும் குளிர்ச்சி சந்திரனின் அம்சமாகவும்,
மனையின் தோற்றம் (வெளிப்பாடு) புதனின் அம்சமாகவும், மனையில் ஏற்படும் அருள்நிலை (வசீகரம், தெய்வகடாச்சம்) குருவின் அம்சமாகவும், செயல்பட்டு மனையே ராசிமண்டலமாக உருப்பெற்று உயிர்கள் கோள்களாகவும் செயல்பட்டு வருவதை நாம் நம் மனையில் அமர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

தற்பொழுது நம் நாட்டில் விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்வதை காண்கிறோம். இவைகளை பற்றிய ஒரு ஆய்வில் நாம் துவங்கியபொழுது மனையடி நூலில் விவசாயத்திற்கு பயனாகும் நீர் சுரக்க கிணறு வெட்டுவதை பற்றியும் எந்த திசையில் அதை அமைப்பது பற்றியும் விளக்கம் கொடுத்து உள்ளார்கள். அனால் அதே விவசாய நிலம் மனைகளாக மாறும் பொழுது அதை பற்றிய விவரங்கள் இல்லை ஆனால் இவ்வாறாக மாற்றி அமைக்கப்படும் மனைகளை பற்றி தகவல் இல்லையென்றாலும் மருளாளிகள் சொன்ன விவரத்தை இங்கே தெரிவிக்கிறேன்.

விவசாயத்தின் தன்மை பெற்ற கோள் செவ்வாய் இந்த பூமிகாரகன் என்ற அங்காரகன் முருகனின் ஆசிகளை பெற்றவன் என்றும், ஒருவகையில் முருகப்பெருமானுக்கு சகோதரன் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது.
மருளாளிகள் பார்வையில் செவ்வாயின் அம்சம் கொண்டவர் வீரபத்திரர் என்றும், இவரின் அம்சத்தை கொண்டவர் கருப்பர் என்றும், மஹபராக்ரம வீரரான இவர் செவ்வாயின் நேரடி ஆசியை பெற்றவர் என்றும், மருத்துவம் மற்றும் விவசாயம் மேற்கொள்ளும் நபர்களை இவர்கள் ஆசீர்வதிப்பார் என்றும், நீர்நிலைகளை காத்து பசி தாகத்தையும் நோய்களுக்கு மருந்தையும் அறிந்துகொள்ள வருபவர்களுக்கு உதவி செய்பவர் என்பதால் நீர் நிலை உள்ள கரையோரத்தில் இவர் வீற்று காவல் செய்வார் என்றும் கரையோரத்தில் பயணம் செய்து எல்லையை காப்பர் என்றும் மருளாளிகள் சொல்கிறார்கள்.

சில குலத்தார் கரையில் உள்ள கருப்பரையும் சிலர் கிணற்றில் உள்ள கருப்பரையும் குலதெய்வமாக வணங்குவதை நாம் காணலாம். இன்று மழை இல்லாமல் போனதிற்கு இவரின் வழிபாடு தடைபட்டது ஒருவகையில் காரணமாக இருக்கிறது.

நிலம்களை மனைகளாக மாற்றும் பொழுது இவரின் எல்லையை அல்லது வாய்க்காலின் வழியை அடைத்து பிரிக்கும்பொழுது அங்கே வசிக்க வருபவர்களுக்கு சில தொல்லைகள் உண்டாவதை உணரலாம். சிலர் நிலத்தில் வீடு கட்டி வாழும் பொழுது இவரின் ஆசிகளை பெற்று விட்டால் அவர்களுக்கு மனையில் தோஷங்கள் இல்லாமல் இவர் ஆசிக்கொடுப்பார் என்று சில மருளாளிகள் பலிபூசைகள் மேற்கொள்வார்கள்.இஸ்லாமியர்கள் செய்யும் பாத்தியா செயலும் மருளாளிகள் செய்யும் பலிபூசைகள் என்பதும் ஒரே தன்மையாக பல தடைகளை நிவர்த்தி செய்வதை நாம் கண்டோம்.

பலிபூசைகள் செய்ய விருப்பம் இல்லாதவர்கள் சிவநாடி நூலை படித்து காகபுஜண்டர் சொல்லிய பரிகாரங்களை செய்து வீட்டை மனையை சுத்தம் செய்து வசிக்கமுடியும் என்று உறுதியாக சொல்லமுடியும்.

மனையடி நூலில் சொல்லப்பட்ட சில பொதுவான விதிகளை நாம் தெரிந்து கொள்வோம்.....
(1) மனையின் வடகிழக்கு எல்லையில் பூமிக்கு பூசைகளை செய்யவேண்டும்
(2) பூசைக்கு பயன்படுத்திய 9 கற்களும் மனையின் பிரதான நிலைக்கும் பூசை அறைக்கும் சமையல் அறைக்கும் பயன்படுத்தவேண்டும்.
(3) வெண்சங்கை பிரதான நிலைக்கு வெளியே பதிக்க வேண்டும். மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் நிலையை ப்ரதிஷ்டை செய்யவேண்டும்.
(4) பிரதான நிலையின் அடி பாகத்தில் இருபுறமும் சர்பங்கள் செதுக்கி மஞ்சள் குங்குமம் வைக்கவேண்டும்.
(5) நிலையின் மேல்புறத்தில் கருநீல வர்ணம் இருக்க வேண்டும்.
(6) நிலைக்கதவின் அருகில் காலணிகள் இருக்கக்கூடாது (சர்ப்பத்தின் அருகில் )
(7) பிரதான கதவினை கால்களால் உதைத்து திறக்க கூடாது. கதவின் தாழ்ப்பாளை அடிக்கக் கூடாது. கதவினை சத்தம் வரும்படி மூடக்கூடாது.
(8) பிரதான கதவினை வலது பக்கம் திறப்பது போல அமைப்பது சிறப்பு. இரு கதவுகள் இருப்பதும் சிறப்பு.
(9) வாசல் படிகளில் அல்லது நிலைக்கதவில் அமர்ந்து உண்ணுதல் உறங்குதல் தலைமுடி வருதல் கூடாது.
(10) பிரதான நிலை வாசலில் நின்று பணம் கொடுத்தால் பெறுதல் மற்றும் பொருள் தானியம் தருதல் பெறுதல் கடன்களையும் நோய்களையும் தரும் என்று நூல்கள் சொல்கிறது.

ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

Our work - Interior View of Genesis Royal Infirmary Coimbatore.
03/01/2025

Our work - Interior View of Genesis Royal Infirmary Coimbatore.

🔥🤝Happy 2025! Let’s embrace the new year with hope, Joy😊, and the determination to make it the best one yet. 🎀🎁May every...
01/01/2025

🔥🤝Happy 2025! Let’s embrace the new year with hope, Joy😊, and the determination to make it the best one yet. 🎀🎁May every moment of this year be filled with positivity and success💪🪄🎉🎈

Interior Designs & Construct🧱
30/12/2024

Interior Designs & Construct🧱

Proposed Hospital under construction🧱
30/12/2024

Proposed Hospital under construction🧱

Interior View🏠
30/12/2024

Interior View🏠

Address

253-D, Ramamurthy Road, Arul Garden, TNHB, Selvapuram North, Selvapuram
Coimbatore
641026

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when OM Saravana Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share